பங்குச்சந்தை என்றால்
என்ன ? (What is meant by Stock Market?)
பொதுவாக பங்குகளை வாங்கி
விற்குமிடமே (டிரேடிங்)பங்குச்சந்தை ஆகும். இங்கு
சிறு முதலீட்டாளர்கள்,தரகர்கள் முதல்
பெரிய முதலீட்டாளர்கள், தரகர்கள் வரை
பங்குபெறலாம்.
உதாரணமாக இந்தியாவில் புகழ்
மும்பை பங்குச்சந்தை
மற்றும் தேசிய
பங்குச்சந்தை (ஆகும். உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New
York Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange),நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங்
பங்குச்சந்தைகள்(Hong Kong Stock
Exchange) புகழ் பெற்றவைகள்.
பங்குச்சந்தை இரண்டு
வகைப்படும், அவை(Different
types of stock market)
· முதன்மை பங்குச்சந்தை (Primary Market)
ஒரு கம்பனி முதன்
முதலாக பங்குகளை
பொது மக்களுக்கு
வெளியிடுமிடம் (Issuing first stocks
to public)முதன்மை பங்குச்சந்தை ஆகும்.
இதற்கு ஐ.பி.ஓ என்று பொருள்.
· இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை(Secondary Market)
முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளைவிற்பதற்கோ
அல்லது வாங்குவதற்கோ
வெளிச்சந்தையை அனுக வேண்டும். ஒரு கம்பனி
ஐ.பி.ஓ (IPO) முடிந்த
பிறகு பங்குச்சந்தையில்
பட்டியலிடப்படும் (Will be listed in
stock market). அதன் பிறகு அக்கம்பனியின்
பங்குகளை முதலீட்டாளர்கள்
பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்பு
விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment